கடவுளுக்கு வயது இரண்டு
கடவுளுக்குப் பிறகு இவனுக்குத்தான் நான் பேசும் எல்லா பாஷைகளும் புரிகிறது !! (English translation included)
கடவுளுக்குப் பிறகு இவனுக்குத்தான் நான் பேசும் எல்லா பாஷைகளும் புரிகிறது !! (English translation included)
உன் முருகனும் என் அல்லாவும் நம் காதலிடம் பேசிப்பார்க்கட்டும் ! பிறகு முடிந்தால் நம் இருவரையும் பிரித்துக் கொள்ளட்டும் !!
இன்னும் சிறிது பேசு ! நான் ஒரு வாரம் உயிர்வாழ இந்த வார்த்தைகள் போதாது !!
உன்னைப் பற்றி ஆயிரம் எண்ணங்கள் என் மனதில் இருப்பினும் என் மனம் இன்னும் வெறுமையாகத்தான் உள்ளது !!
அட உன் தாய்மொழியும் தமிழ்தானா ? நான் மௌனம் என்றல்லவா நினைத்திருந்தேன் !!
இதுநாள் வரை பலர் இறந்திருக்கின்றனர் ! உலகம் இன்னும் உயிருடன் இருக்கின்றது !! ஆனால் பெண்ணே இன்று நான் உயிருடன் இருக்கிறேன் !
என் இதயத்தின் ஒவ்வொரு நரம்பும் நீ ஏறும் பேருந்து நிறுத்தம் ! எல்லா நிறுத்தத்திலும் ஏறும் நீ எதிலும் இறங்குவதில்லை !!
இதயத்தைக் கிழித்து விட்டாய் ! இதயச் சுவர்களை சல்லடையாக்கினாய் ! அப்படியாவது முடிந்ததா என் இதயத்தை விட்டு வெளியேற ?
அவள் வானவில் ! என் இதயத்தில் மழையடித்து முடிந்தபின்னே மறைந்து விட்டாள் !!
நான் உன்னைப் பார்க்கும் போதெல்லாம் கண்டு கொண்டு அசைந்தாடும் உன் கம்மல்கள் !!
அந்த ரயில் நிலையத்தைக் கடக்கையிலே எதேச்சையாக ஞாபகம் வந்து தொலைத்தது — உன்னைக் கடைசியாக இரயிலேற்றியது !