All Startup Poems தமிழ் கவிதை Talks & Interviews

நான் உன்னைப்
பார்க்கும் போதெல்லாம்
கண்டு கொண்டு
அசைந்தாடும்
உன் கம்மல்கள் !!

நெற்றியை அடிக்கடி
தேய்க்காதே !
அதில் எழுதப்பட்டிருப்பது
என் விதி !!

என் கைக்குக்
கிடைக்கும் கொலுசெல்லாம்
உன் காலுக்கு மட்டும்தான்
சரியாகப் பொருந்துகின்றன !!

மொழிபெயர்த்தால்
இசையாகும்
தன்மை உண்டு
உன் வார்த்தைகளுக்கு !!

உன் இதழ்கள்
பிரசவித்த
சிரிப்புக் குழந்தையை
நான் தத்தெடுத்து
வளர்க்கிறேன் !!

நமக்கு விவாகரத்து
கிடைத்து விட்டது !
அனாதையாகத் தெருவில்
கிடக்கிறது
நம் காதல் !!

கல்லறையைக் கட்டிவிட்டு
என்னடி சந்தோசம் !
கல்லறைகள் எல்லாம்
தாஜ்மஹால்கள் இல்லை !!

நாம் பிரிந்த
நாள் முதல்
என் இமைக்காதலர்களும்
பிரிந்து விட்டனர் !!

நான்
உயிர் வாழும் வரை
என்னை
அறைந்து செல்லும் காற்றில்
கலந்திருக்கும் உன் சிரிப்பு !!