இன்னும் சிறிது பேசு !
நான்
ஒரு வாரம் உயிர்வாழ
இந்த வார்த்தைகள்
போதாது !!
நீ பேசும்போது
நான் ஏன்
அமைதியாயிருந்தேன்
அறிவாயா ?
எங்கே சப்தமிட்டால்
குயில் பறந்து விடுமோ
என்றுதான் !!
உன் பெயரைக் கொண்டு
உருவான ஒரு
மொழியில்தான்
நான்
காதல் பேசிக்
கொண்டிருக்கிறேன் !!
எதையாவது வெறித்துக்
கொண்டிருக்கும் நான்
எப்போதாவது சிரித்தால்
உன்னை நினைப்பதாக
அர்த்தம் !!
நான் அவளைக்
கட்டியணைத்தேன் !
மூச்சு விடத்திணறியது
மூச்சுக்காற்று !!
என் சிவப்பு ரோஜாவே !
எவ்வளவுதான்
வெட்கப்பட்டாலும்
இதற்குமேல்
உன் முகம்
சிவக்கவா போகிறது ?
முகம் காட்டிக் கொள்ளையடிக்கும்
உன்னை விட
முகமூடிக் கொள்ளையர்கள்
எவ்வளவோ மேல் !!
சவரம் செய்ய
சோம்பேறித்தனம் !
ஆனாலும் கவலையில்லை !
காதல் தோல்வி
என்று சமாளிக்கலாம் !!
நீ பேசிய வார்த்தைகளை
விட
நீ பேசப்போகும்
வார்த்தைகள்
இனிமையாக இருக்கின்றன !!
எனக்கு சிற்பம்
செதுக்க ஒரு
நல்ல கல் வேண்டும் !
உன் இதயத்தைத் தருவாயா ?
பூக்களைப் பறிப்பவர்கள்
அறிவதில்லை !
செடிகளின்
பிரசவ வேதனை !!
நீ பேசும்
ஒவ்வொரு வார்த்தையும்
என் ஒருநாள்
பிராணவாயு !
மூன்று கவிதைகள் !!