அந்த ரயில் நிலையத்தைக்
கடக்கையிலே
எதேச்சையாக
ஞாபகம் வந்து தொலைத்தது –
உன்னைக் கடைசியாக
இரயிலேற்றியது !
நான் இதுவரை
பார்த்திராத உன் ஊர்
மிகவும்
பரிச்சயமாகத் தெரிகிறது –
உனது ஊர் என்ற
ஒரே ஒரு காரணத்தால் !
ஏதோ சுலபமாக
வழியனுப்பி விட்டேன் !
நீ சென்ற பின்புதானடி
உறைத்தது –
உன்னை மறுபடி
பார்க்கப் போவதில்லையென்று !!
அந்த ரயில் நிலையத்திலேயே
நான் பிணமான உணர்வு –
இன்று வரை எனக்கு
உயிர் திரும்பவில்லை !
இன்றும் ரயிலைப்
பார்க்கும் போதெல்லாம்
தண்டவாளத்துடன்
தடதடக்கிறது மனது !!