All Startup Poems தமிழ் கவிதை Talks & Interviews

இதயத்தைக்
கிழித்து விட்டாய் !
இதயச் சுவர்களை
சல்லடையாக்கினாய் !
அப்படியாவது முடிந்ததா
என் இதயத்தை
விட்டு வெளியேற ?

உன் பார்வையின்
அழுத்தம் தாங்காமல்
சிதறிப் போகின்றன பாறைகள் !
எப்படித் தாங்குகிறது
என் மனம் ?

அவள் மூக்கில்
ஒரு தங்கப் பரு
மூக்குத்தி !!

கோயிலின் முன்
ஒரு துளசி மாடம் !
அங்கே வேண்டிக்கொள்கிறேன்
உனக்காக !
உள்ளே செல்ல
எனக்குத் தகுதியில்லையாம் !!

நீயும் எனக்குக்
கிடைத்திருந்தால்
நான் கடவுள்
ஆகியிருப்பேன் !!

என் கவிதைகள்
கேட்கின்றன —–
எங்கள் தாயைக்
காண்பி !
ஒருமுறையேனும்
படித்து விடேன் !!

நீ
ஏற்படுத்திய காயத்திற்கு
ஒரே மருந்து —-
காலம்தான் !
காத்திருக்கிறேன் !!